வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
பிரதான தொழிற்பாடுகள்
நிவாரண, சிறு உபகரண உதவிகள் வழங்குதல்.
வயது முதிர்ந்தோருக்கான விசேட அடையாள அட்டைகள் வழங்குதல்.
அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பான ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கல்.
விதவை, அநாதை, வலது குறைந்தோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்திற்கு சிபாரிசு செய்தல்.